சிறு வயதில் தீபாவளிக்கு எங்கள் கிராமத்துக்குச்சென்றுவிடுவோம்
முதல் நாளிளிருந்தே பண்டிகைக்கு தயார் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்
வேலைக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் அதிரசம் தோசை வடை எல்லாம் மாலையில் தயார் செய்வார்கள்,
வீட்டிலுள்ள பெண்கள் சிறுமிகள் எல்லாம் முதல் நாள் மாலையே எண்ணைக்குளியல் செய்துவிடுவார்கள். ஆண்கள் யாவரும் தீபாவளி அன்று விடியற்காலை எழுந்து விடுவோம் . எண்ணை தேய்த்து குளிப்பாட்ட ஒரு ஆள் வந்து நன்றாக எண்ணை தேய்த்து
தட தடவென்று தலை உடல் எல்லாம் தட்டி வெந்நீர் ஊற்றி இலுப்பக்கட்டி (soapnut pwder past) தேய்த்து குளிப்பாட்டிவிடுவார்.சுகமாக இருக்கும். பிறகு புத்தாடைகள் அணிந்து
சூரிய உதயத்துக்கு முன் சிற்றுண்டி பலகாரங்கள் உண்டு மகிழ்ந்து பட்டாசுகள் கொளுத்தி ஆனந்தமாக இருப்போம்.( ஐம்பதுகளில் ஐந்து ருபாய் பட்டாசுகளே தீபாவளி மற்றும் கார்த்திகைக்கு போதுமானதாக இருக்கும் ! இன்று கற்பனை செய்ய முடிமா ?)
ஒருமுறை அப்பா யானை வெடியை வவ்வால்களை விரட்ட வீட்டுக்குள் வெடித்தார். அந்த சப்தத்தில் அறுகில் தூங்கிக்கொண்டிருந்த எங்கள் பாட்டிக்கு ஒரு காது செவிடாகிவிட்டது.
பின்னர் வேலையாட்களும் ஏழைகளும் வருவார்கள். அவர்களுக்கு நல்லெண்ணெய், தீபாவளி பலகாரங்கள் புதிய துணிகள் எல்லாம் விநியோகிப்போம்.
அப்போதெல்லாம் எங்கள் கிராமத்தில் மின்சாரம் கிடையாது. வானொலிப்பெட்டி கிடையாது .பஞ்சாயத்து அலுவலகத்தில் பேட்டரியில் இயங்கும் ரேடியோ திருச்சி வானொலியை கரகரப்பாக ஒலிபரப்பும்! (இன்று கேபிள் டிவி எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது )
கல்கி ஆனந்த விகடன் தீபாவளி மலர்கள் வரும். அவற்றில் கேலிச்சித்திரங்கள் கதைகள்
படித்து பொழுது போக்குவோம்.
அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் வேண்டாவெறுப்புடன் பள்ளிக்குச்செல்ல டவுனுக்கு புறப்படுவோம்.இரட்டை மாட்டு வில்வண்டியில் பயணம் செய்து இரண்டுமணி நேரத்தில் உளுந்துர்பெட்டை சென்று பஸ் மூலம் பயணத்தைத்தொடர்வோம்
Nice to see your anecdote.
ReplyDeleteI remember a story in Kalaimagal where an Indian woman settled abroad brings her children to enjoy the like of Deepavali you have narrated.
But they find everything changed with box sweets,TV shows and return totally disappointed !!