Sunday, January 1, 2012

பஞ்சபூதங்களின் திருவிளயாடல் - ஒரு எண்ணோட்டம்

பஞ்சபூதங்கள் நிலம், நீர், நெருப்பு,வாயு, ஆகாயம்.

உலகை ஆட்டிவைக்கும் சக்தி அனைத்தும் நெருப்புக்கோளான
சூரியனிடமிருந்தே கிடைக்கிறது. நிலத்தில் நீருடனும் வாயுவுடனும்
சேர்ந்து சூரியனிடம் இருந்து வரும் வெப்ப சக்தி உயிரினங்களை 
உற்பத்தி செய்து அவை வாழ உணவுப்பொருட்களையும் உருவாக்குகிறது.

சூரியனின் வெப்பத்தால் சீதோஷன நிலை மாற்றங்கள், தட்ப வெப்ப மாற்றங்கள், கடலில் நீரோட்டம்,காற்றழுத்தத்தாழ்வுமண்டலங்கள்,
பருவமழை, மழையால் வெள்ளம், புயல் ஆகியவை உண்டாகின்றன.
பூமியிலும் நகரும் மாபெரும் நிலப்பரப்புகளின் மோதல்களால்
பூகம்பங்கள் மற்றும் கடல்கோள் (TSUNAMI) போன்ற பேரழிவுகளை உண்டாக்குகிறது.

புவி ஈர்ப்பு சக்தியும் பஞ்ச பூதங்களுடன் கை கோர்த்து விளையாடுகிறது.

ஆக்கலும் காத்தலும் அழித்தலும் பஞ்சபூதங்களின் திருவிளையாடல்களே.
இவற்றை ஆட்டுவிக்கும் சக்தி நம் கற்பனைக்கெட்டாத ஒன்று

No comments:

Post a Comment